உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 仄厅J°

கின்றோம்' என்று சில சொற்களைப் பெய்து பொருள்

கொள்க.

எட்டு அடிகளிலும் முதற்சீர்கள் எதுகை பெற்று வருதல் காண்க; இதனை முற்று எதுகை என்பர். இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்திருத்தல் காண்க.

2. வையத்து வாழ்வீர்காள்! (பாவை நோன்பு)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே

நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளை

சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

வையத்து வாழ்வீர்காள்-உலக நன்மாந்தரே, நாமும் நம் பாவைக்கு-நாமும் நம் பாவை நோன்புக்கு செய்யும் கிரிசைகள்-மேற்கொள்ளும் விரதங்களை கேளிரோ-கேட்பீராக பாற்கடலுள்-திருப்பாற்கடலில் பையத் துயின்ற-யோகத்துயில் மேற்கொண்டுள்ள பரமன்-பரந்தாமனின்