உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 27*

அடிபாடி-திருவடிகளைப் பாடி, போற்றிப்பாடி. நெய்யுண்ணோம் பால் உண்ணோம்-நெய், பால் இவற்றைத் தவிர்ப்போம், நாட்காலை நீராடி-காலை நாளில் (விடியற்காலையில்) நீராடி மையிட்டு எழுதோம்-அதன்பின் கண்களுக்கு மை தீட்டி

ஒப்பனை செய்துகொள்ள மாட்டோம். மலர் இட்டு நாம் முடியோம்- பூச்சூடி புனைவு தேட மாட்டோம் . செய்யாதன செய்யோம்-சான்றோர்கள் கடிந்து உரைக் கும் தீய செயல்களை மேற்கொள்ளமாட்டோம். தீக்குறளை சென்று ஒதோம்-தீய கோள் சொற்களைப் பிறரிடத்துச் சென்று சொல்லமாட்டோம். ஐயமும் பிச்சையும்-தானமும் தருமமும், ஆந்தனையும்-இயன்ற அளவு, கைகாட்டி-தந்து உதவி, உய்யுமாறு எண்ணி-பிறவித்துயரினின்று உய்யும்வழி களை நினைத்து அறிந்து, உகந்து-(செயல்பட்டு) உயர்வோமாக. ஏல்ஓர்-அசைநிலைகள். எம்பாவாய்-எம்பாவையே! உன்னை வழிபடு

கின்றோம்:

தொகுப்புரை

உலக நன்மாந்தரே! நாமும் நம் பாவை நோன்புக்கு மேற்கொள்ளும் விரதங்களைக் கேட்பீராக.

திருப்பாற்கடலில் யோக நித்திரை கொள்ளுகின்ற பரந்தாமனின் திருவடிகளை வணங்கிப் போற்றி நெய், பால் இவற்றை உண்பது தவிர்ப்போம்; விடியற்காலை யில் நீராடுவோம், பின் கண்களுக்கு மைதீட்டி ஒப்பனை