உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 29

தீக்குறளை-தீய குறளை-குறள் நூல் என்று தவறாகக் கருதிவிட வாய்ப்பு உள்ளது; குறளை என்பது சிறு சொற் களால் ஆகிய வாசகம் என்பதாம். அது கோள்சொல். என்க. கோள் சொல்வார் சில சொற்களே பேசி மூட்டி விடுவர்.

ஐயம்-தானம்; பிச்சை-தருமம்; தாமே வலியக்கொடுப்பது தானம். பிறர் கேட்டுத் தருவது பிச்சை. ஆந்தனை-ஆகும் தனை-ஆகும் அளவு. கைகாட்டி-கைமடக்குதல் இல்லை என்பதாம்; வாய்ப் பேச்சு பயன் இல்லை என்பதாம். உய்யுமாறு-பிறவித்துயரினின்று தப்பும் நெறிகளை

அறிந்து. எண்ணி-பலகாலும் சிந்தித்து. உகந்து-உயர்வு அடைவோம். (முற்றுப்பொருளில்

பொருள் கொள்க) உகப்பு-உயர்வு என்ற பொருள் உடையது.

உவப்பு-மகிழ்ச்சி; உகப்பு-உயர்வு வேறுபாடு காண்க.

3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி (நோன்பின் பயன்)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால, தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து ஒங்கு பெருஞ்செந் லூடுகயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.