உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ராசீ

பதவுரை

ஓங்கி உலகளந்த உத்தமன்—பேருரு எடுத்து உலகினை அளந்த உத்தமன்

பேர்பாடி—புகழைப் பாடி

நாங்கள் நம் பாவைக்கு—நாம் நம் பாவைத்தெய்வத்துக்கு

சாற்றி—நம் வழிபாட்டைக்கூறி

நீராடினால்—நீராடுவதால்

தீங்குஇன்றி—கெடுதல் இல்லாமல்

நாடு எல்லாம்—நாடு முழுவதும்

திங்கள் மும்மாரி பெய்து—மாதந்தோறும் மூன்று மழை பெய்து அதனால்,

ஓங்கு பெருஞ்செந்நெல்—ஓங்கிய, மிக்க செந்நெற் பயிர் விளைய

ஊடு கயல்புரள—அவற்றின் இடையே கயல்மீன்கள் பிறழவும்,

பூங்குவளைப் போதில்—குவளை மலரில்

பொறி வண்டு—புள்ளிகளை உடைய வண்டுகள்

கண்படுப்ப—தேன் உண்டு மகிழ்ந்து துயிலவும்

தேங்காதே—தயங்காது

புக்குஇருந்து—(கறக்கப்) புகுந்து

சீர்த்த முலைபற்றி—பெருத்த மடியினைப்பற்றி

வாங்க—வளைக்க; இழுக்க

குடம் நிறைக்கும்—பாற்குடங்களை நிரப்பும்

வள்ளல் பெரும் பசுக்கள்—வளமான பெரிய பசுக்களும்.

நீங்காத செல்வம்—நீங்காத பெருஞ்செல்வமும்,

நிறைந்து—நிறைவோம்

எம்பாவாய்—பாவைத் தெய்வமே உன்னை வழிபடுகின்றோம்