உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 町r牟

புக்கு-புகுந்து, பகுதி இரட்டித்து இறந்த காலம் காட்டியது.

நிறைந்து-நிறைவோம் என முற்றுப் பொருளில் பொருள் கொள்க. -

கால வழுவமைதியும் ஆகும்.

4. ஆழிமழைக் கண்ணா (மேகத்தை வேண்டுதல்)

ஆழிமழைக் கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்; ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல், வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

ஆழிமழைக் கண்ணா-கடலில் தோன்றும் மழையாகிய தெய்வமே!

நீ ஒன்றும் கைகரவேல்-நீ சிறிதும் எங்கள் வேண்டு

கோளை மறுக்காதே ஆழியுள் புக்கு-கடலில் புகுந்து முகந்துகொடு-முகந்துகொண்டு ஆர்த்து ஏறி-ஆரவாரித்து மேலே சென்று ஊழிமுதல்வன் உருவம் போல் - ஊழிக் காலத்து முதற் பொருள் ஆகிய நாரணன் உருவத்தைப் போல. மெய்கறுத்து-வடிவு கறுத்து