உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 33

பாழியம் தோள் உடை-வலிமைமிக்க தோள்களை உடைய பற்பநாபன்-பத்மநாபன்-நாபிக் கமலத்தை உடையவன் கையில் ஆழிபோல் மின்னி- கைச்சக்கரம் என ஒளிவிட்டு வலம்புரிபோல் நின்றதிர்ந்து. அவன் வலம்புரிச் சங்குபோல்

நிலைத்து ஒலித்து (இடித்து) தாழாதே -தொடர்ந்து சார்ங்கம் உதைத்த சரமழைபோல்-திருமாலின் வில்

வெளிப்படுத்தும் அம்புகளின் தொகுதியைப்போல. உலகினில் வாழப் பெய்திடாய்-உலகத்தவர் வாழ நீ

பெய்யச் செய்வாயாக; நாங்களும் மார்கழி நீராட-நாங்களும் இம் மார்கழிமாதத்தில் நீராடுவதற்கு மகிழ்ந்து-மகிழ்ச்சி அடைவோம்.

தொகுப்புரை

கடலில் தோன்றும் மேகமே நீ சிறிதும் மறுக்காதே.

மழையைப் பெய்விப்பாயாக! கடலுள் புகுந்து நீரை முகந்து கொண்டு வந்து, பேரொலி செய்து, உலகளந்த பெருமானைப் போல வடிவு கறுத்து, அவன் கைச்சக்கரம் போல் மின்னி ஒளிசெய்து, வலம்புரிபோல் இடித்துத் தொடர்ந்து அம்பு மழைபோல மழைநீரைப் பொழிவிக்க அருள் செய்வாய்.

விளக்கவுரை

ஆழிமழைக்கண்ணா-மழையைக் கண்ணன் என்று கூறியது அதைத் தெய்வமாக மதித்ததால் என்க.

ஒன்றும்-சிறிதும்

கொடு-கொண்டு என்பதன் இடைக்குறை.