உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ராசி

கைகரவேல்-கையை ஒளிக்காதே ஊழிமுதல்வன்-ஊழிக்காலத்து முடிவில் பிரளயம் எழும்: அப்பொழுது கடல் கிளர்ந்து எழுதல் உண்டு; இறைவன் யாதும் எல்லாமுமாகி நின்ற நிலையில் பிரளயமாகக் கறுத்து இருப்பான் என்க. மேகம் மூண்டு எழும்போது கறுத்து இருக்கும்.

பாழி-வலிமை; அம்-சாரியை

பற்பநாபன்-இது பத்மநாபன் என வழங்குதல் காண்க; தாமரை மலரை நாபியாக (கொப்பூழாக) உடைய வன். அதில் பிரமன் பிறந்தான் என்பர்; அவன் கமலத்தோன் எனப்படுகிறான். பதுமம்-தாமரை த் ற் ஆகியது. தாழாதே-தாழாமல் சாரங்கம்-திருமாலின் கையில் உள்ள வில்லுக்கு இப்பெயர் வழங்குகிறது. அதனால் அவனைச் சாரங்கபாணி என்பர். நீராட மகிழ்ந்து - நீராடுவதற்கு மகிழ்வோம்; மகிழ்ந்து எனக் கூறியது கால வழுவமைதி: ஆழி-இரு பொருளில் ஆளுதல் நயம் காண்க.

5. மாயனை (இறை வழிபாடு)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனை துயோமாய் வந்துநாம் தூமலர்து வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்