உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 35

பதவுரை

மாயனை-மாயம் வல்லவனை

மன்னும் வடமதுரை மைந்தனை

நிலைபெற்ற வடமதுரையில் பிறந்த மகனை

தூய பெருநீர் யமுனைத்துறைவனை

யமுனைத் துறையில் ஆடிப் பாடி மகிழ்ந்து திரிந்த

6hs 606tor ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கை

ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய ஒளி விளக்கினை

(ஆயர்குலம் சிறப்பு நிலை அடைந்தவாறு கூறியது)

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைதேவகிக்கு அவனைப் பெற்றதால் பெருமை சேர்த்துத் தந்த பெருமானை.

தூயோமாய் வந்து-குளித்து நீராடித் தூயவர்களாய் வந்து,

தூமலர்த் தூவித்தொழுது - தூய மலரிட்டு வணங்கி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-வாயினால் பாடி

மனத்தால் தியானிக்க போய பிழையும்-கடந்த காலப் பிழைகளும், புகுதருவான் நின்றனவும்-இனிச் செய்யக் கூடிய

தவறுகளும், தீயினில் தூசு ஆகும்-தீயில் இட்ட தூசாக மறைந்து விடும்; செப்பு-அவன் புகழைப் பாடுக.

தொகுப்புரை

மாயம் வல்லவன், வட மதுரையில் பிறந்தவன்;

யமுனைத் துறையில் ஆயர் பாடியில் வளர்ந்தவன்; ஆயர்