உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ராசி

குலத்தின் ஒளி விளக்காகத் திகழ்பவன்; தேவகிக்கு அவள் வயிற்றில் பிறந்ததால் பெருமை தந்தவன்; அவனை நீராடித் தூயவர்களாக வந்து வாயினால் பாடியும், மனத்தினால் சிந்தித்தும் வழிபட்டால் செய்த பாவங்களும், செய்ய இருக்கும் தவறுகளும் அணுகா, அவை தீயினில் இட்ட தூசு ஆகிவிடும்; அதனால் அவன் புகழைப் பாடு

6) ի ԱԱ T Ց5 .

விளக்கவுரை

மாயன் : இவன் ஆயன் அல்லன் மாயன்' என்பார் பெரியாழ்வார். மாயம் வல்லவன்; எதையும் சூழ்ந்து

செயலாற்றுபவன்; அவன் செயல் பிறர்க்கு எளிதில் விளங்காது என்பதாம்.

வடமதுரைமைந்தன் :

அவன் பிறந்த ஊர் இது என்று கூறியது. மைந்துவலிமை என்ற பொருள் தரும் சொல்; மைந்தன்-மகன்.

யமுனைத்துறைவன் - பசுக்களை மேய்த்துச் சென்று ஆயர் மகளிரோடு திரிந்து ஆடிய இடம்; பல அசுரர் களைக் கொன்ற இடம் அது; வளர்ந்த இடம் என்பதாம். ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு :

இடையர் குலத்தில் அவன் அறிவு நிறைந்தவனாக விளங்கினான் என்பதாம். மற்றவர்க்கு ஒளி தந்தான் என்பதாம்.

குடல் விளக்கம் செய்தல்-அவனைப் பெற்ற வயிறு. பெருமை பெற்றது என்பதாம்.

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்' -குறள். மனம் வாக்கு காயம்; திரிகரணசுத்தி வேண்டும் எள்பர். அதையே இங்குக் கூறினார் என்க.