உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 41

தயிர் அரவம் கேட்டிலையோ- தயிர்கடையும் மத்தொலி கேட்கவில்லையோ நாயகப் பெண் பிள்ளாய்-மகளிர் திலகமே! நாராயணன் மூர்த்தி கேசவனை- இறைவன் திருப்

பெயர்கள் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ- பாடவும் நீ கேட்டுக் கொண்டே படுத்து உறங்குகிறாய், (அவ்வாறு எப்படி உன்னால் உறங்க முடிகிறது?) தேசம் உடையாய்- ஒளி படைத்தவளே! திறவு- கதவைத் திறப்பாயாக; ஏல்ஓர்-அசைச் சொற்கள் எம்பாவாய்-எம்பாவையே (வழிபடுகிறோம்;

அருள்கூட்டுக) தொகுப்புரை

வலியான் என்னும் கரிக்குருவி கீசுகீசு என்று தமக்குள் பேசிக் கொள்ளும் ஒலி காதில் விழவில்லையா, மந்தமான பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்ப ஒலிக்கவும், கை பெயர்த்து ஆய்ச்சியர் மத்தினால் கடைந்த ஓசை உண்டாக்க வும் அவ்வொலி கேட்டிலையோ, மகளிர் திலகமே! நாராயண னைப் பாடவும் நீ கேட்டுக்கொண்டே படுக்கையில்:கிடக் கிறாயே! ஒளி உடையவளே கதவைத் திறப்பாயாக. விளக்கவுரை

கீசுகீசு- ஒலிக்குறிப்பு; இரட்டைக்கிளவி ஆனைச்சாத்தன்- கரிக் குருவியைக் குறிப்பது பேய்ப்பெண்ணே என்றது- பேயறைந்தது போல் தூங்கிக் கிடப்பதால் தெய்வத் தன்மைக்கு மாறுபட்டது பேய்த் தன்மை; எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மந்தமான நிலை;

தி-4