உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ராசி

அவன் இயல்பான நிலை அவள் சிறப்புமிக்கவள் என்பது; பெண்களின் நாயகி (தலைவி) யாக இருக்கக் கூடிய தகுதி படைத்தவள், மகளிர் திலகம் என்பது அதற்கு இணையான தொடர் எனலாம்; மறுபடியும் அவளைத் தேசம் உடையாய் என்று விளிக்கிறார். அவசரப்பட்டுப் பேய்ப் பெண்னே' என்று அழைத்து விட்டாள்; அவளைச் சமாதானப்படுத்தும் முறையில் நாயகப் பெண் பிள்ளாய்' எனவும், தேசம் உடையாய் ' எனவும் விளித்து உயர்த்துகிறாள்.

வாச நறுக்குழல் ஆய்ச்சியர்- பூச்சூடிய கூந்தல் உடைய

வர் என்பதாம்.

காசு பிறப்பு- இவை மகளிர் தாலிச் சரட்டில் கோத்துக் கொண்டுள்ள தாலி வகைகளைக் குறிப்பதாகும். யாப்பு இயலில் சீர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தேமா புளிமா, இவற்றைக் காசு, பிறப்பு என்று குறிப்பிடுவர்; அவற்றின் சொற்பொருள் திருப்பாவைப் பாடலால் விளங்குகிறது.

காசு பிறப்பு என்பவை பெரிதும் சிறிதுமாக அடுத்து அடுத்துக் கோக்கப்பட்ட பொன்தாலிகள் எனத் தெரிகிறது பிறப்பு என்பதால் அது குட்டித்தாலி' ; சிறியது என்பது பொருளாம். பொன்னால் செய்த தாலி, காசு காலை என்ற தொடர் காண்க.

தயிர் ஒலியோடு மங்கலத்தாலி ஒலியும் சேர்ந்து இசைத்தல் கூறப்படுகிறது.

தயிர் ஒலி- கரகரப்புடையது; பேரொலி:

தாலி ஒலி- இனிமை உடையது; மெல்லொலி:

கேசவனைப் பாடவும் நீ கேட்டுவிட்டு எப்படி உறங்கு கிறாய் அது உன்னை அழைக்கும் ஒளியல்லவா என்பது கருத்து. கோயிலில் குழுமி உள்ளவர்கள் பக்திப்பரவசத்தால் பாடி அழைப்பது இது.