உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 43

இப்பாடல் ஒலிகளை மட்டும் குறிப்பிடுவதாக அமைவது தனிச்சிறப்பு ஆகும். கரிக்குருவியின் பேச்சொலி, தயிர்கடை யும் வீச்சொலி, பக்தர்களின் பாட்டொலி இவை பள்ளி எழுச்சி ஒலிகளாக அமைந்துள்ளன.

8: கீழ்வானம் வெளுத்தது (இறையருள்)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல்

காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மா வாய்பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாங்

பதவுரை

கீழ்வானம் வெள்ளென்று-கிழக்கு வானம் வெளுத்து

விட்டது என்று எருமை சீறுவீடு-எருமைகள், சிறிது விடுதலை பெற்றுக்

காலார நடந்து மேய்வான் பரந்தனகாண்-மேய்வதற்குப் பரவிச் சென்

றுள்ளன. மிக்கு உள்ள பிள்ளைகளும்-போகாமல் எஞ்சி உள்ள

சிறுமியரும் போவான்போகின்றாரை-போவதற்காகப் புறப்படு

கின்றவர்களையும் போகாமல் காத்து-போகாமல் தடுத்து நிறுத்தி