உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 49

தோற்றும்-போர்க் களத்தில் தோல்வியுற்ற போதும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ உன்னிடமே அவனுக்குரிய பெரிய உறக்கத்தைத் தந்துவிட்டானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்-மிக்க சோம்பல் உடை யவளே!

அருங்கலமே-அரிய அணிகலன் போன்றவளே.

தேற்றமாய் வந்து திற-தெளிவாகத் துயில் விட்டு

எழுந்து வந்து கதவைத் திறப்பாயாக.

தொகுப்புரை

நோற்றதன் பயனாகச் சுவர்க்க சுகத்தை அனுபவித்து வரும் செல்வ மகளே! பதிலும் பேச மாட்டீர்; வாசலும் திறக்க மாட்டீர்; நாராயணன் போற்றப் பறை தருவான். தோற்றும் கும்பகருணனின் தூக்கத்தை உனக்குத் தந்து விட்டான். மிக்க சோம்பல் உடையவளே! செல்வ மகளே! துயில் நீங்கித் தெளிவாக வந்து கதவைத் திறப்பாயாக.

விளக்கவுரை

நோற்றுச் சுவர்க்கம்புகுகின்ற அம்மனாய்

இந்த இப்பிறவியில் செல்வமும், சுகமும் அமைய வேண்டுமானால், சென்ற பிறவியில் அதற்கு ஏற்ற தவத்தைச் செய்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தது. அதைத் தெரிவிப்பது இந்தக் கருத்து.

அம்மனாய்-விளித் தொடர்

அம்மை என்ற பொருளில் அம்மன் என்பது வழக்கில் இருக்கிறது. கோயிலில் இருக்கும் தெய்வத்தை மட்டும் 'அம்மன் என்று வழங்குகின்றனர். அஃது ஐ விகுதி பெற்று அம்மனை என வழங்கி உள்ளது. அம்மானை என்ற சொல்லும் காண்க.