உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 53

பெண்டாட்டி - பெண்மையை ஆளுபவள் - வழக்குச் சொல். மனைவி என்ற பொருளில், ஈண்டு வரவில்லை. செல்வமகள் என்பதே பொருள் ஆகும்.

குற்றம் ஒன்றும் இல்லாத - பிறர் பொருளை எதிர் நோக்கி வாழ்பவர் அல்லர். தாக்க வருபவரையே தாக்குவர் அன்றி வீண் வம்புக்குப் போகாதவர் என்க.

மயிலே என்றது - சாயலை உடையவளே என்பதாம். முேகில் வண்ணன் மேகநிறத்தவன்; மேகத்தைக் கண்டும் நீ உவகை கொள்ள வேண்டாமா என்பதாம். மேகம் கண்டு மயில் ஆடும் என்ற நயம் காண்க. புனம்-காடு.

12. கனைத்திளங் கற்றெரும

(எழுக எனல்)

கனைத்திளங் கற்றெருமை கனறுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித் தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

இளம் கற்று எருமை கனைத்து-இளம் கன்றுகளை உடைய எருமை கனைத்து கன்றுக்கு இரங்கி-கன்றின் பசிக்கு இரங்கி நினைத்து-நினைத்த அளவு முலை வழியே நின்று பால் சோர-மடி வழியே

தொடர்ந்து பால் வழிய