உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 rm-4*

நனைத்து இல்லம் சேறு ஆக்கும்-நனைந்து வீட்டைச் சேறு ஆக்குகின்ற நற்செல்வன் தங்காய்-மிக்க செல்வத்தை உடையவ னின் தங்கையே! பனிதலை வீழ-பனி தலையிலே விழ நின் வாசற்கடை பற்றி-உன் வாசலின் முன் வந்து நின்று, சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்-செற்ற சினத்தோடு இராவணனை அழித்த

மனத்துக்கு இனியானை-நம் மனத்துக்கு இனிய

நாரணனை, பாடவும்- யாம் பாடவும், நீ வாய் திறவாய்- நீ வாய் திறக்காமல் இருக்கிறாய்; இனித்தான் எழுந்திராய்- இனியாவது எழுந்திரு; ஈதென்ன பேருறக்கம்-ஏன் இப்படி மிகுதியாகத்

தூங்குகிறாய்! அனைத்து இல்லாத்தாகும் அறிந்து- எல்லா வீட்டாரும் துயில் எழுந்து விட்டனர்.

தொகுப்புரை

இளங்கன்றின் தாயாகிய எருமை தன் கன்றுக்கு இரங்கி அதை மனத்தில் நினைத்துத் தன்மடி வழியே பால் சொரிய அதனால் நனைந்து இல்லம் சேறு ஆகிறது. அத்தகைய வளம் மிக்க வாழ்வு பெற்ற நற்செல்வனின் தங்கையே!

நாங்கள் பனி தலையிலே விழுந்து கொண்டிருக்க உன் விட்டு வாசல்முன் நின்று இராவணனைக் கொன்ற மனத் துக்கு இனிய பெருமானை அவன் புகழைப் பாடவும் நீ வாய் திறவாமல் இருக்கிறாய்; இனியேனும் துயில் எழுக; இப்படியா நீ தூங்குவது? எல்லா வீட்டாரும் எழுந்து

விட்டனர்.