உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 55

விளக்கவுரை

கன்றுக்கு அதன் தாய்ப்பசு இரக்கம் காட்டுகிறது. பனி தலையில் விழ யாம் அழைக்க நீ ஏன் கவனிக்காமல் இருக்கிறாய் ' என்பது உள்ளுறைப் பொருள்.

கனைத்து- எருமை கனைப்பது தான் இருக்குமிடத் தைக் கன்றுக்கு அறிவிக்க வேண்டி என்க.

கற்றெருமை- கன்றை உடைய எருமை; வேற்றுமையில் மெல்லினம் வல்லினம் ஆயிற்று. கறப்பார் இல்லாமல் தானாகப் பால் சொரிந்து தரையை நனைக்கிறது; அதனால் வீடு சேறு ஆகிவிட்டது என்று கூறப் படுகிறது. -

நற்செல்வன்- மிக்க செல்வம் உடையவன். நல்ல என்பது மிகுதியை உணர்த்தியது.

தங்காய்- மணமாகாத கன்னி என்பது உணர்த்தப்படு கிறது தங்கைக்கு மணமாகிவிட்டால் அங்கே இகுக்க வேண்டிய தேவை இல்லை என்க.

பனி தலை விழுதல்- மார்கழி மாதம் பணி பெய்யும் என்பது கூறப்படுகிறது.

மனத்துக்கு இனியவன்- நாம் நேசிக்கும் பெருமான்

என்பதாம்.

வாய் திறவாய்- பேசாமல் இருக்கிறாய்: நாங்கள் பாட வும் நீ மட்டும் ஏன் பாடாமல் இருக்கிறாய்! என்ற பொருளும் தருதல் காண்க.

இப்பாடலில் திருமால் மனத்துக்கு இனியவன் என்பது கூறப்படுகிறது. அவனை அனைவரும் நேசிக்கின்றனர் என்பதும் உணர்த்தப்படுகிறது.