உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 59

செங்கல் பொடிக் கூறை-செங்கல்லைப் பொடி செய் தாற்போன்ற நிறத்தை உடைய காவி உடையையும்,

வெண்பல் தவத்தவர்-அழுக்குப் படியாத வெண்மையான பல்லையும் உடைய தவசிகள்

தங்கள் திருக்கோயில்-தத்தம் திருக்கோயில்களுக்கு சங்கிடுவான்-சங்கு ஊதுவதற்கு போதந்தார்-போகிறார்கள்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்எங்களை முற்பட்டு எழுப்புவதாக வெறும் வாய்ப் பேச்சுப் பேசும் நங்கையே!

எழுந்திராய்-எழுந்திடுக. நாணாதாய்-இன்னுமா தூக்கம்? வெட்கமில்லையா? நாவுடையாய்-பேச்சுக்காரி சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-நாரணன்; பங்கயக் கண்ணானை-தாமரை மலர் போன்ற கண்

&B 606 T Đ 6ö) 1–IL 6), 6&)6&T

பாடு-பாடுவோமாக.

தொகுப்புரை

உங்கள் புழைக்கடைத் தோட்டத்துக் குளத்தில் செங் கழுநீர்ப்பூ மலர்ந்துவிட்டது; ஆம்பல் கூம்பிவிட்டது. காவிஉடையும், வெண்பல்லும் உடைய தவசிகள் தத்தம் கோயில்களுக்குச் சங்கு ஊதச் செல்கின்றனர். எங்களை வந்து எழுப்புவதாக வெறும் பேச்சுப் பேசும் தலைமைப் பெண்ணே எழுந்திரு, இன்னுமா உறக்கம். வெறும் பேச்சுக் காரிதான் நீ! சங்கும் சக்கரமும் ஏந்திய கையன் தாமரைக் கண்ணன் ஆகிய நாரணனைப் பாடுவோம் வா எழுக.