உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ராசி

விளக்கவுரை

உங்கள் புழைக்கடை- எங்கேயோபார்க்கவேண்டாம் உம் வீட்டுத் தோட்டத்தை எழுந்து பார்' என்று கூறியது.

வாவி-நீர் நிலை; குளம். காலையில் செங்கழுநீர்ப்பூ இதழ் விரியும்; ஆம்பல் குவியும்,

செங்கல்; வெண்பல்-முரண் தொடை. கூறை-கூறு படுத்தி உடுத்தும் ஆடை. தங்கள் திருக்கோயில்-அவரவர் பணி செய்யும் கோயில் களுக்குத் தவசிகள் காலையில் சென்று சங்கு ஊதுவர் என்று தெரிகிறது.

சங்கிடுவான்-சங்கு இட, வினையெச்சம். எழுப்புவான்-வினையெச்சம்; எழுப்புவதாக; எழுப்ப. நாணா தாய்-வெட்கமில்லையா நீ இன்னும் உறங்கு கிறாயே என்பது.

தடக்கை-விசாலமான கைகள். பங்கயம்-பங்கஜம்-தாமரை. கண்ணான்-கண்ணை உடையவன்.

பொழுது விடிந்தது; அதற்கு அறிகுறிகள் மலர்களின் மலர்ச்சியும் கூம்பலும், தவசிகளின் செல்கையும்;

நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்!-விளிகள். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன் நாரணனைப் பாடுவோமாக,

15. எல்லே! இளங்கிளியே!

\உரையாடல்கள்) "எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!' "சில்லென் றழையேன் மின்! நங்கைமீர்!

போதர்கின்றேன்.”