உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ராசி

16 நாயகனாய் கின்ற (வாயிலோனை விளித்தல்)

நாயகனாய் நின்ற நந்தகோ பனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய, ஆயர் சிறுமிய ரோமுக்கு அறையறை மாயன் மணிவண்ணன் நென்னலே

வாய்நேர்ந்தான்; துரயோமாய் வந்தோம்! துயிலெழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்,

பதவுரை

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய-தலைவனாக இருக்கும் நந்தகோபனின்.

கோயில் காப்பானே-அரண்மனையைக் காவல் செய்

பவனே.

கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே-- கொடிகளும், தோரணமும் தோன்றும் வாயிலைக் காப் பவனே!

மணிக்கதவம் தாள் திறவாய்-மணிகள் பொருந்திய நெடுங்கதவின் தாளைத் திறப்பாயாக!

ஆயர் சிறிமியரோமுக்கு-ஆயர் சிறுமியர் ஆகிய எமக்கு

அறை பறை-ஒலிக்கும் பறையை

மாயன் மணிவண்ணன்-கண்ணன்

நென்னலே வாய் நேர்ந்தான்-நெருநலே (நேற்றே) தருவதாக இசைவு தந்தான்.