உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 65

துயில் எழப் பாடுவான்-துயில் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாடுவதாக

தூயோமாய் வந்தோம்-மனம் தூயவர்களாக வந்துள் ளோம்.

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே-ஏதாவது பேசிக் கொண்டிருக்காமல்

நேய நிலைக் கதவம்-பொருந்தியுள்ள நெடுங்கதவினை. நீக்கு-நீக்கித் திறப்பாயாக! அம்மா-விளிச்சொல்! தாய்மை உள்ளம் படைத்த அய்யா என்ற பொருளினது. தொகுப்புரை

ஆயர் பாடியில் தலைவனாக உள்ள நந்தகோபனின் அரண்மனையையும், வாயிலையும் காப்பவனே! நெடுங் கதவைத் திறப்பாயாக.

மாயன் மணிவண்ணன் ஆயர் சிறுமியர் எங்களுக்கு நேற்றே பரிசிலாகப் பறை தருவதாக அறிவித்துள்ளான்; நீ எங்களைத் தடுக்காதே; திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காகத் தூய மனத்தோடு வந்திருக்கிறோம்.

ஏதாவது பேசிக் கொண்டு காலம் தாழ்த்தாதே! அய்யா! மூடி இருக்கும் கதவினைப் பிரித்து நீக்குக. விளக்கவுரை

கோயில் காப்பவனும், வாயில் காப்பவனும் ஒருவனே என்க.

மணிக்கதவம்-நெடுங்கதவு என்பது பெறப்பட்டது. சிறுமியரோம்-வினையாலணையும் பெயர். அறைபறை-வினைத்தொகை; அடிக்கும் பறை.

நென்னல்-நெருனல் என்பதன் மரூஉ முடிபு: நேற்று என்பது பொருள்.