உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ராசி

துயில் எழப்பாடுவான் வந்தோம் எனக் கூட்டுக. மாற்றாதே-மறுத்துப் பேசாது; பறை பெறுதல் உறுதி என்பது ஆகும். அம்மா என்பது வாயில் காப்பவனை விளித்தது, அய்யா என்ற பொருளினது. வேண்டுதல் பொருள் தரும் சொல்.

நேய நிலைக்கதவு-பொருந்திய கதவு; நேசத்தோடு கதவு திறப்பாயாக எனவும் கொள்ளலாம்.

நீக்கு-இணைவது இரண்டு கதவுகள் எனத் தெரிகிறது.

17. அம்பரமே தண்ணிரே

(கண்ணன் குடும்பத்தவரை எழுப்புதல்)

அம்பரமே தண்ணிரே சோறே அறஞ் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல

விளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய் அம்பர முடறத்தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

பதவுரை

அம்பரமே-ஆடையும், தண்ணிரே சோறே-தண்ணிரும், சோறும். அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா-பிறர்க்குத் தந்து அறம்செய்யும் எம் தலைவர் நந்த கோபாலரே!

எழுந்திராய்-துயில் எழுக . கொம்பனார்க்கு எல்லாம்-பெண்களுககு எல்லாம். கொழுந்தே-போற்றத் தக்கவளே