உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 67

குல விளக்கே-ஆயர் குலத்தை ஒளிவிடச் செய்யும் தலைவியே!

எம்பெருமாட்டி யசோதாய்-எம் தலைவி யசோதையே. அறிவுறாய்-விழித்து எழுக. அம்பரம் ஊடு-ஆகாயத்தின் ஊடு. அறுத்து ஓங்கி உலகு அளந்த-கிழித்துக்கொண்டு மேலேஉயரச் சென்ற.

உம்பர்கோமானே-தேவர்கள் தலைவனே! உறங்காது எழுந்திராய்-துயில் எழுக. செம்பொற் கழலடிச் செல்வா-பொன்னால் ஆகிய விரக் கழலைக் காலுக்கு அணியும் செல்வமகனாகிய

பலதேவா-பலதேவனே! உம்பியும் நீயும் உறங்கேல்-உன் தம்பியும் நீயும் உறங்காது எழுக.

தொகுப்புரை

உடுக்க உடையும், குடிக்கத் தண்ணிரும், உண்ணச் சோறும் தந்து தருமம் செய்யும் எம் தலைவன் நந்த கோபாலனே! துயில் எழுக; மகளிர் போற்றும் மாபெரும் தலைவி யசோதையே! விழித்து எழுக; உலகளந்த பெருமானே! உறங்காது எழுந்தருள்க; பலதேவா! நீயும் உன் தம்பியும் உறங்காது எழுந்தருள்க.

விளக்கவுரை

அம்பரம்-உடை மானிடர் உடுத்துவது; விண்ணை

உடுத்துவது ஆகாயம். ஒரே சொல் இருவேறு பொருளில் வருதல் காண்க .

அம்பரமே, தண்ணிரே, சோறே-ஏகாரம் எண்ணிடைச் சொல்; உம் என்ற பொருளில் வந்துள்ளது.