உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ராசி

நந்த கோபாலன்-கண்ணனின் வளர்ப்புத் தந்தை. அறிவுறாய்-விழித்து எழுக; செல்வன்-பலதேவன்; உறங்கேல்-ஏல் எதிர்மறை விகுதி: காலில் வீரக்கழல் சிலம்பு அணிந்திருந்தான் என்க. அதனால் பலதேவன் கழலடிச் செல்வன் எனக் கூறப்

பட்டான்.

ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்

ஓங்கி உலகளத்த உத்தமன் என்று முன்னர்க் கூறப் பட்டது. எங்கும் நிறைந்த பரமன் என்ற கருத்தை வற்புறுத் தல் காண்க; இது பாமாலை என்க.

ஈண்டு நந்தகோபாலன் (தந்தை) , யசோதை (தாய்) , பலதேவன் (தமையன்), உம்பர் கோமான் (கண்ணன்) குடும்பத்து அனைவரையும் எழுப்புதல் காண்க. இதுவும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல் எனலாம்.

18 உங்து மதகளிற்றன் (நப்பின்னையை விளித்தல்) உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே! நபபின்னாய்! கந்தம் கமழும் குழலி: கடை திறவாய். வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

உந்துமதகளிற்றன்-யானைகளை உடையவன்;

ஓடாத தோள்வலியன்-போரில் புறமுதுகிடாத வீரன்;