உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ராசி

நப்பின்னையின் அணைப்பு உன்னைத் தடுக்கிறது. அந்த நயப்பைச் சிறிது விட்டுக் கொடுக்கக் கூடாதா என்று கண்ணனுக்கே கூறியதாகிறது.

ஆற்ற கில்லை-கில் இடைச்சொல்; ஆற்றலை

உணர்த்துவது. தத்துவம்-கொள்கை; நியாயம்; இது பொது நியதி.

தகவு-உனக்கு இது தகாது என்று சிறப்பு நியதி கூறப் பட்டது என்க. தகவு அன்று என ஒரு சொல் கூட்டிப்பொருள் கொள்க.

யார்மீது குறை கூறுவது? கண்ணனுக்கோ நப்பின்னை யைவிட்டுப் பிரிய, மனம் இல்லை; அவளும் விட்டுக் கொடுப் பதாக இல்லை; என்ன செய்வது; சிறிது விட்டுக் கொடு; எங்களுக்கு அருள் செய்ய அனுப்பு என்று கேட்டுக்கொள் கிறார்கள்.

குக்கூ என்றது கோழி; துட்கு என்றது என் தூய நெஞ்சம்; தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல்

வைகறை வந்ததால் எனவே

இக் குறுந்தொகைப் பாடல் இக்கருத்தையே உணர்த்து கிறது.

கோழி குக்கூ என்றதாம்; தோளைத் தழுவும் காதல னைப் பிரிக்கும் விடியற் பொழுது வாளைப்போல வந்து விட்டதே என்று திடுக்கிடுகிறாள்; தலைவி தலைவனைப் பிரிய மனம் இல்லாமல் இருக்கும் நிலையைப்பற்றி இக்குறுந் தொகைப் பாடல் அழகாகச் சித்திரிக்கிறது. அதே நிலை தான் நப்பின்னை நிலையும்.