உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 79

20. முப்பத்து மூவர்

(நப்பின்னையை உதவுக எனல்) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீ ராட்டேலோ ரெம்பாவாய்.

பதவுை

முப்பத்து மூவர் அமரர்க்கு-முப்பத்து மூன்று பிரிவினர் ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு.

முன்சென்று-நடுக்கம் வருவதற்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே-அவர் துயரத்தைத் தீர்க்கும்

பெருமையை உடையவனே

துயில் எழாய்-துயில் எழுக. செப்பம் உடையாய்-செம்மை உடையவனே! திறல் உடையாய்-வலிமை உடையவனே! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா-பகைவர்க்கு அழிவு நல்கும் மேலானவனே! துயில் எழாய்-துயில் எழுக. செப்பன்ன மென்முலை-செம்பொற்குடம் போன்ற

விரும்பத்தக்க அழகுடைய முலையினையும், செவ்வாய் சிறுமறுங்குல் - சிவந்த வாயும், சிறிய

இடையும் உள்ள

தி-6