உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ராசி

கோப்புடைய சீரிய சிங்காதனத்து இருந்து - கட்டுக் கோப்பு உடைய சிறப்பான சிங்காதனத்துமீது அமர்ந்து,

யாம் வந்த காரியம்-யாம் வந்த காரியத்தை,

ஆராய்ந்து அருள்-கேட்டு அறிந்து தெளிந்து முடிவு செய்து அருள் செய்வாயாக.

தொகுப்புரை

மழைக்காலத்தில் மலைக்குகையில் தங்கிப் படுத்து உறங்கும் ஆண் சிங்கம் விழித்து எழுந்து கண் சிவந்து வியர்வையோடு கூடிய மயிர் பொங்க நாலாபக்கமும் சென்று உதறி மூர்க்கத்தனமாக முற்றி நிமிர்ந்து முழக்கம் செய்து புறப்பட்டு வெளியே வருவதைப்போல,

காயம்பூ நிறத்துக் கண்ணா! நீ உன் அரண்மனையில் இருந்து வெளிவந்து இங்கே வந்து அருளி வேலைப்பாடு உடைய அழகிய சிங்காசனத்துமீது அமர்ந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் செய்வாயாக.

விளக்கவுரை

குகையில் இருந்து சிங்கம் வெளிப்படுவது போலத் திமிர் வாங்கி நிமிர்ந்து தூக்கத்தை உதறித் தள்ளி நீ சிங்காசனத் தில் வந்து அமர்க! என்று கூறப்படுகிறது.

மாரிமலை முழைஞ்சு - மலைக்குகையில் உறங்கிக் கிடக்கும் சிங்கம் பசியின் தூண்டுதலால் வெளிப்படும்போது அதன் கண்கள் சிவந்த நிறத்தோடு காணப்படுவது கூறப் படுகிறது.

மழைக்காலத்தில் மலைக்குகையில் தங்கிப்படுத்து உறங்கும் ஆண் சிங்கம் விழித்து எழுந்து கண் சிவந்து வியர்வையோடு கூடிய மயிர் பொங்க நாலாபக்கமும் சென்று உதறி மூர்க்கத்தனமாக முற்றி நிமிர்ந்து முழக்கம்