உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

町阿*

ஆகக் கண்ணனின் புகழ் மொழிகளாக ஆறு நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. இவற்றில் வற்புறுத்தப்படுவன.

1.

2

3

4.

5

6

திருவடிசசிறப்பு (உலகம் அளந்தது) : திறல் (இராவணனை அழித்தது); புகழ் (சகடம் உதைத்தது); ஆற்றல் (கன்றினை விளவின் மீது எறிந்தது) : குணம் (குன்றைக் குடையாக எடுத்தது) : வெற்றி (வேல் போற்றுதல்)

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து (பறை தருக எனல்)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கில னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

ஒருத்தி மகனாய்ப் பிறந்து-தேவகி மகனாகப் பிறந்து: ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர-அதே

இரவில் யசோதை மகனாக மறைந்து வளர,

தரிக்கிலன் ஆகி-இதைத் தாங்கிக் கொள்ள இயலாத

வன் ஆகி.