உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 85

தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து-அவன் தானும் தீமை நினைத்தான்; அத் திட்டத்தைப் பிழையாகும்படி செய்து, கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலேகம்சனின் வயிற்றில் நெருப்பாக நின்ற திருமாலே! அருத்தித்து வந்தோம்-(பறையை) விரும்பிப் பெற

வந்தோம் பறை தருதி யாகில்-யாம் கேட்ட பறையைத் தருவா

யானால் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி-மதிக்கத் தக்க உன் செல்வத்தையும் வெற்றிகளையும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-உன் அருள் பெறாதிருந்த வருத்தமும் தீர்ந்து மகிழ்வு பெறுவோம். தொகுப்புரை

தேவகி மைந்தனாகப் பிறந்தாய்; அதே இரவில் யசோதை மகனாக ஒளித்து வளர்ந்தாய் .

இதைக் கம்சன் தாங்கிக் கொள்ள இயலவில்லை; உன்னை அழிக்கப் பல திட்டங்கள் போட்டான்; அனைத் தையும் பொய்யாக்கி அவன் வயிற்றில் நெருப்பாக இருந்து பயத்தை உண்டு பண்ணினாய்.

நெடுமாலே! உன்னை நச்சி வந்தோம்; பறை தருவா யானால் உன் செல்வத்தையும் புகழையும் பாடுவோம்; அருள் பெறவில்லையே என்ற ஏக்கம் தீர்ந்து மகிழ்ச்சி பெறுவோம். விளக்கவுரை

கம்சனுக்கு அஞ்சிப் பிறந்த தாயிடம் வளர முடியாமல் மற்றொரு தாயை அடைந்தாய்; அஞ்சி ஒதுங்கினாலும் அவன் கிஞ்சித்தும் இரக்கம் காட்டாமல் வஞ்சித்துக் கொலை செய்யத் திட்டமிட்டான் என்பது உணர்த்தியவாறு.