உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 吁TJ°

பெற்றவள் உன்னை வளர்க்கும் பேறு பெறவில்லை. அத்தகைய சூழ்நிலையைக் கம்சன் உருவாக்கினான் என்ப தும் உணர்த்தப்பட்டது.

நெருப்பு என்ன நின்றாய்-வயிற்றில் நெருப்பாக

நிமிர்ந்தாய்; வயிற்று எரிச்சல் அவனுக்கு என்பதுமாம்.

வயதில் சிறியவனாக இருந்தும் நீ அவன் மார்பில் நின்றது. வாமன அவதாரத்தில் நெடுமாலாக நிற்பதைப் போல இருந்தது என்ற கருத்தைக் காண்க.

அவன் வயிற்றில் நீ நெருப்பாக அச்சுறுத்திக் கொண் டிருந்தாய் என்ற பொருளும் காண்க.

கஞ்சன்-கம்சன் என்ற சொல்லின் தமிழாக்கம்.

உன் அருளால்தான் உன்னைப் பாடமுடியும் என்பதாம்.

செல்வம்-என்றது கண்ணனின் பல்வேறு சிறப்புகள்.

சேவகம்-வெற்றிகள்.

ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்து கம்சனுக்கு நெருப்பாக நின்றது; திருத்தக்க செல்வமும்

சேவகமும் யாம் பாடி வருத்தம் தீர்வோம் எனல் பாமாலைப் பகுதி என்க.

28. மாலே! மணிவண்ணா! (வேண்டுவன இவை எனல்)

மாலே! மணிவண்ணா! மார் தழிநீ ராடுவான் மேலையார் செயவனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலததை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே