உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ராசி

தொகுப்புரை

பகைவர்களை வெல்லும் சீர்மையுடைய கோவிந்தா! உன்னைப் பாடிப் பறை கொள்வோம்; அதற்கு மேலும் யாம் பெறும் நன்கொடைப் பொருள்கள் நாட்டவர் புகழும்படியாகச் சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்று இத்தகைய பல்வகையான அணிகலன்கள் இவற்றை அணிவோம்; பல் வகை ஆடைகளை உடுப் போம்; அதற்குப் பிறகு பால் சோறு, நெய் பெய்து முழுங்கையில் ஒழுகி வழியும்படி சுற்றத்தினரோடு கூடி யிருந்து அமர்ந்து உண்டு உரையாடி மனம் குளிர்வோம்.

விளக்கவுரை

கூடார்-நம்மோடு பொருந்தாதவர்; பகைவர்; சூடகம், தோள் வளை, தோடு-இவை மூன்றும் தோளுக்கு அணியும் அணிவகைகள்;

செவிப்பூ-காதணி.

பாடகம்-கால் அணி; பல் கலன் என்றதால் ஆடையும் பலவகை என்று கொள்ளுதற்கு இடம் தருகிறது. புதிய ஆடைகள் எனப்பொருள் கொள்வது சிறப்பாகும்.

பாற்சோறு-பால் இட்டுப் பொங்கிய சோறு;

மூட நெய் பெய்து-மூடுமாறு நெய் பெய்து. மிகுதியாகப் பெய்து:

ஆழ்வாகள் பொதுவாக வேண்டுவன நெய் கலந்த சோறு, புத்தாடை, பல்வகை அணிகள் என்பது பெரி

யாழ்வார் பாடலிலும் தெரிகிறது.

" நெய்யுடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக فقا للكيلاة اTن 6زق)