உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 91

மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

திருப்பல்லாண்டு-8.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா; கோவிந்தன் (பசுக்களைக் காத்தவன்) ; புகழ்மசலை.

28. கறவைகள் பின்சென்று (பறை தருக எனல்)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம், அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம், குறைவொன று மில்லாத கோவிந்தா!

உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத பிள்ளைகளோம் அன்பினால்

உன் தன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பதவுரை

கறவைகள் பின் சென்று-பசுக்களின் பின்னால் ஒட்டிச் சென்று.

கானம் சேர்ந்து உண்போம்-காட்டுக்குச் சென்று அங்குக் கட்டுச் சோறு அவிழ்த்து உண்போம்;

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து-அறிவு சிறிதும் இல்லாத ஆயர் குலத்தில்.