உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bகுப்பாவை 93

திருந்தாலும் நீ கோபித்துக் கொள்ளாதே; பொறுத்தருள்க: இறைவா! நீ எமக்கு நோன்பு இயற்றப் பறை தருக! அதுவே யாம் வேண்டுவது.

விளக்கவுரை

கறவைகள்-பால் கறக்கும் பசுக்கள்; கானம்-காணகம் என்பது கானம் என ஆயிற்று: கான் என்பதே அடிப்படைச் சொல்; கான் + அகம் கானகம்.

ஒன்றும்-சிறிதும்; (உறவு) ஏல்-ஏல் அசைச்சொல்; பொருளற்றது.

பிள்ளைகள்-இது மகளிர் பாடுவதாக அமைவது; பெண் பிள்ளைகள் சிறுமிகள் என்று பொருள்

பொருந்தும்.

கொள்வது

சிறுபேர் - பெரியவர்களைப் பெயரிட்டு அழைத்தல் தவறு; அப்படி அழைக்கக் கூடாது. அவ்வாறு பெயர் இட்டு அழைப்பது எமக்கு இயல்பாகிவிட்டது; அதைப் பொறுத்துக் கொள்க; அதற்குக் காரணம் உன் மீது யாம் கொண்டுள்ள அன்பே ஆகும். சிறப்பு அடைதராமல் வெறும் பெயரிட்டுக் கூறுவது சிறுபேர்; உறவு பற்றி அழைப்பதே பெருமை; நேரே பெயர் சொல்லி அழைப்பது மரியாதை இன்மை என்று கருதப்படும்.

பறை தருதல்-நோன்பு விழாவிற்குப் பறை தேவைப் படுகிறது. அதனைக் கொட்டி வழிபடுவர் என்று தெரிகிறது.

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, இறைவாகண்ணன் புகழ் மொழிகள்