உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ராசி

29. சிற்றஞ் சிறுகாலே

(ஆட்செய்வோம் எனல்)

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச சேவித்து உன் பொற்றா மரையடியே போற்றும்

பொருள் கேளாய்: பெற்றம்மெய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்

கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம்; உனக்கே நாம்

ஆட்செய்வோம்: மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பதவுரை

சிற்றம் சிறு காலே-விடியற் காலையில்

வந்து உன்னைச் சேவித்து-வந்து உன்னை வழிபட்டு

உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்

கேளாய்-உன் திருவடிகளை வணங்குவதன் நோக்கம் எது? அதனைக் கேட்பாயாக!

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

ஆயர் குலத்தில் நீ பிறந்தாய்;

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

(உனக்கு பணிசெய்வதே எம் கடமையாகும்) நீ இடும் சிறு கட்டளைகளை ஏற்று யாம் நடக்கக் கடவோம்;