உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 95

இற்றைப் பறை கொள்வான் அன்று-இன்று ஏதோ தரும் பறையைப் பெறுவதற்கு மட்டும் அல்ல. கோவிந்தா-எங்கள் தலைவனே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்-என்றைக்கும்

தொடர்ந்து வரும் ஏழு ஏழு பிறவிகளுக்கும்; உன் தன்னோடு உற்றோமே யாவோம்-உன்னோடு

உறவு கொண்டவர்கள் ஆகிறோம்;

உனக்கே நாம் ஆட் செய்வோம்-உனக்கே யாம்

அடிமைப்பட்டுப் பணிகள் செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று-ஏனைய எம்

ஆசைகளை அகற்றி விடுக.

தொகுப்புரை

விடியற் காலையில் வந்து உன்னை வழிபட்டு வணங்கு கிறோம். யாம் அறிவிக்கும் செய்தி இது:

ஆயர் குலத்தில் நீ பிறந்திருக்கிறாய்; நீ எம் தலைவன்; நீ இடும் கட்டளைகளை ஏற்று நடப்போம்;

பறை பெறுவதற்கு மட்டும் உன்னை அணுகவில்லை. எப்பிறவியிலும் தொடர்ந்து இதே போலப் பணி செய்ய எம்மை ஆட் கொள்வாய்; எம் ஏனைய ஆசைகளை அகற்றி விடுக

விளக்கவுரை

சிற்றம் சிறு காலே-அதிகாலை என்பது பொருள்அடுக்குத் தொடர். மிகச் சிறிய காலைப் பொழுது: மிகுதியை உணர்த்தும் அடுக்கு; சிற்றம் சிறு-சிறு + அம்+சிறு அம்-பகுதிப்போருள் விகுதி: