பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தினைக்கோர் காவல்கொண்ட

குறத்தேன் மாதுபங்க! திருப்போ ருரமர்ந்த பெருமாளே

பொருந்திய மலர்களையும். கங்கா நதியையும். சூடியருளும் ஆதியாக விளங்கும் சிவபெருமானுக்கு, புத்திரனே இருக்கு வேதத்தாலே, எண்ணித் துதிப்பவர்களினுடைய நாவிலம் மனத்திலும் வீற்றிருப்பவனே தெய்வயானை தங்கப்பெற்ற அழகிய மார்பையுடையவனே அகங்காரம் அதிகரித்த, கடலில் மாமர வடிவமாக நின்ற சூரபதுமனை, உருவம் மாறி ஒழிய வென்ற வலிய வேலை. திருக்கரத்திலே தாங்கியிருக்கிற, முருகக் கடவுளே! தினைப்புனத்தில் காவலாக இருந்த, குறவர் பெண்ணாகிய வள்ளி நாயகியாரை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு விளங்குபவனே திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே உருக்கு இரும்பினாற் செய்வதாகிய, கணையை ஒத்த விழிகளாலும் மலையை நிகர்த்த கச்சையணியப் பெற்ற முலைகளினாலும், சொல்லும் அமுது கொப்பளிக்கும். பிறைத் திங்களை ஒத்த நெற்றியையும் நூலை ஒத்த அழகு பெற்ற அழகு மிகுந்த இடையையும் வேயை நிகர்த்த தோளையும், மேகத்தை நிகர்த்த குழலையும் கொண்டு மகிழ்ச்சியாக, முற்பட்டு மேலே விழுந்து திரிவோர்களாகிய அருமையான பெண்களுடைய இடத்திற்கு, ஒடிச் சென்று இன்பமாகிய வலைக்கு கருதுகின்ற மனத்தை உடையவனும், மிகுந்த பாவத்தைச் செய்பவனுமாகிய யான், குற்றத்தினாலும், கவிகின்ற மயக்கத்தினாலும், அழிகின்ற, இந்த அவத்தால் இந்தக் கேட்டால், குறைவில்லாமல், கருணையைச் செய்வாயாக,

எருக்கு ஆத்தி கூதாளி என்னும் இவைகளின் நறுமணம்