பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

69


வெந்து போன்பு ராதன சம்பராரிபு ராரியை

வென்ற சாயக மோகரு விளையோ, கண்

தஞ்ச மோ, யம தூதுவர் நெஞ்ச மோ, என மாமத

சங்க மாதர்ப் யோதர மிகமூழ்கி

சங்கையோ இரு கூதள கந்த மாலிகை தோய்தரு

தண்டை சேர்கழல் ஈவதம் ஒருநாளே,

பஞ்ச பாதக தாருக கண்டன் நிறுளழ வானவர்

பண்டுபோல் அம்ராபதி குடியேறப்

பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை

பங்கம்நீறு எழ வேல்விடும் இளையோனே!

செஞ்ச டாட்வி மீமிசை கங்கை மாமதி தாதகி

திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே!

செண்ப காடவி நீடிய துங்க மாமதில் சூழ்தரு

செந்தில் மாநகர் மேவிய பெருமாளே.

பஞ்சமகா பாதகங்களைச் செய்து வந்தவனாகிய தாருகாசுரன் அழிவெய்தவும், தேவர்கள் முன்போலவே பொன்னுலகத்திற் குடி புகவும், பிரமன் திருமாலும் தஞ்சமென்று சொல்லி குறை இரந்து வேண்டவும், பெரிதாகிய கிரெளஞ்ச மலையை சிதைந்து கெட்டுச் சாம்பராகவும், வேலாயுதத்தைச் செலுத்தும் இளமைக் கோலம் வாய்ந்த முருகப்பெருமானே! சிவந்த சடையாகிய கானின் மேலே, கங்கை நீரையும், சீரியதாக மதிக்கப்பெறும் ஆத்தி மாலையையும் பிறையும் அணிந்துள்ள இறைவரது பெரிய செல்வமே சண்பகக்காடு, சிறந்து மிகுந்து விளங்கும். உயர்ந்த பெரிய மதில்கள், நெருங்கியுள்ள திருச்செந்தூர் என்னும் பெரிய திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, பெருமானே! விரும்பத்தக்க தாமரை மலரோ மிகக் கொடிய