பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

73



பிணமும் அணைபவர் வெறிதரு புனல் உணும்

அவச வனிதையர் முடுகொடு மணைபவர் பெருமை உடையவர் உறவினை விடவருள்

புரிவாயே;

அளையில் உறைபுலி பெறுமுக வயிறரு

பசுவின் நிரைமுலை அமுதுன நிரைமகள் வசவ னொடுபுலி முலையுண மலையுடன்

. உருகாநீள்

அடவி தனில்உள உலவைகள் தளிவிட

மருள மதகொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைக னிலம்வர

விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய

இசைகள் பலபல தொனிதரு கருமுகில் சுருதி யுடையவன் கொடியவன் மனமகிழ்

மருகோனே!

துணைவ குணதர சரவண பவ! நம

முருக! குருபர! வளர்அறு முக குக!

துறையில் அலைஎறி திருநகர் உறைதரு

பெருமாளே.

குகையில், வசித்துக் கொண்டிருக்கும் புலி பெற்ற குட்டி, புல்லையும் நீரையும் உண்ணும் பசுவினது. முலைகளினின்றும். வழிந்தொழுகும் பாலைக் குடிக்க, பகவின் பெண் கன்ர. ஆண் கன்றுடன், புலியினுடைய முலையிலுள்ள பாலை ஊட்டிக் குடிக்க, மலையோடு உருகுகின்ற நீளமாகிய காட்டினிடத்தே. உள்ளவனாகிய மரங்கள், தளிர்த்து இருக்க, ஆண் யானைகள், பெட்டை யானைகளோடு மதம் பெருகி மயங்க, அகன்று பரவிய