பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் *3. 9ア

தாள் பணிந்தவர்பொற் றோர்விரும் பிமிகத்

தான்்மெலிந் துவிடத் தகுமோதான்் சூரர்துண் டுபடப் போர்கடந் துதொழத்

தோயமும் சுவறப் பொருவேலா! தூய்மைகொண் டகுறத் தோகைநின் றபுனம்

சூழ்பெருங் கிரியில் திரிவோனே! ஆரணன் கருடத்து ஆரனன் புகழ்தல்

காலமுண் டவருக் ". குரியோனே!

ஆலயம் பழனச் சோலையின் புடைசுற்று

ஆவிநன் குடியிற் பெருமாளே!

அசுரர்கள் துண்டு பட்டழிய, அசுரப் போரில் வென்று. எல்லோரும் வணங்கும்படி, கடல் நீரும் வற்ற போரைச் செய்த வேலாயுதத்தை உடையவனே தூய்மை உடைய, மயில்போலும் வள்ளியம்மையார் வசித்துக் கொண்டிருந்த தினைப்புனமானது. சூழ்ந்துள்ளதாகிய பெரிய மலையினிடத்து, வள்ளி அம்மையார் பொருட்டு உலாவினவனே பிரமாவும், கருடனைக் கொடியாகக் கொண்டுள்ள திருமாலும், தன்னைப் புகழும்படி, திருப்பாற் கடலிற் தோன்றிய ஆலகால விடத்தை அமுது செய்த சிவபெருமானுக்கு, அன்பிற்கு உரிய புத்திரனே கோயில்களும், வயல்களும், சோலைகளும் இனிய பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்ற திருவாவிநன்குடி என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானே மேகத்தைப் பூண்ட மலைகளுடைய நிலத்திலே பிறந்து முன்னை வினைகளினாலே இப் பிறப்பிலே ஏற்பட்டுள்ள காம மயக்கத்தால், மனம் மெலிந்து அறிவு கலங்கி, காலையும் நரம்பையும் இரத்தத்தையும் தோலையும், கொழுப்பையும் பெற்றுள்ள பொய்யான தேகமாகிய இந்த ஒன்றை, சுமந்து கொண்டு. தொண்டனாகிய நான், மலர்