பக்கம்:திருப்புமுனை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


“மாணிக்கம் நோஞ்சானா இருக்குறதுக்குக் காரணம் இப்பத்தான் புரியுது. உடல் வலுவோ, படிப்போ இல்லாத மாணிக்கக்தை நெனச்சு அவன் அம்மா வருந்துறது நியாயம்தானே? நம்ம வகுப்பிலே கண்ணனுக்கு அடுத்தபடியா மாணிக்கம்தானே மக்கு’ன்னு பேரு வாங்கி யிருக்கான்.”

“கண்ணனுக்குப் படிப்பில்லேன்னாலும் பயில்வான் மாதிரி உடம்பிருக்கே! அவன் எந்த வேலையும் செய்து பிழைச்சுக்குவான். மாணிக்கத்தால் அதுகூட முடியாதே அருள்.”

இனியன் தன் அச்சத்தை கவலை தோய்ந்த முகத்துடன் வெளிப்படுத்தினான். இதைக் கேட்ட அருள், மாணிக்கம் இவ்வாறு நோஞ்சானாக இருப்பதற்கான காரணத்தைப் பற்றி ஆராய முற்பட்டான்.

“இளம் வயதிலே நல்ல ஊட்டச்சத்து இல்லாது போனால் மூளை வளர்ச்சி ரொம்பவும் பாதிக்கப்படும்’னு எங்க டாக்டர் ஒருசமயம் அப்பாகிட்டே சொல்லிக் கொண்டிருந்ததை நான்கூடக் கேட்டிருக்கேன். சரி, நேரமாயிட்டுது. எங்கம்மா தேட ஆரம்பிச்சுருவாங்க. இந்தா உன் புத்தகப்பை. நான் போய் வரேன் ‘டா.” என்று கூறியபடி விரைந்து தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். மாணிக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/19&oldid=489768" இலிருந்து மீள்விக்கப்பட்டது