பக்கம்:திருப்புமுனை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


வரிசையாகக் கூப்பிட்டு நிறுத்திடுவார் போலிருக்கு.”

மணி தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான். ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.

“...சிலர் மற்றவர் எழுதிய கட்டுரையைத் திருடி, எழுதியவர் பெயரை மட்டும் மாற்றி, அதில் தம் பெயரை எழுதியிருக்கிறார்கள். பாவம்! பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர கட்டுரையிலுள்ள கையெழுத்தை மாற்ற முடியவில்லை.

“ஏன்’டா தங்கதுரை! போட்டி இறுதி நாளன்று இனியன் தான் எழுதி வச்சிருந்த கட்டுரை காணாமப் போச்சு’ன்னு சொன்னானே, ஒருவேளை அதுவாக இருக்குமோ?” மணி தங்கதுரையின் காதைக் கடித்தான்.

“பொறுத்திருந்துபார்த்தா எல்லாமே புரிஞ்சு போயிடுது” தங்க துரை பதில் சொன்னான். ஆசிரியர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“...முதற் பரிசுக்குரிய கட்டுரையை எழுதிய மானவன் உழைப்பை மன உழைப்பு-உடல் உழைப்பு என இரு வகையாகப் பிரித்துக் கொண்டு மிக அழகாக எழுதியுள்ளான்.

“மன உழைப்பு எத்தகையது என்பதையும், அதனால் இறவாப் புகழ்பெற்ற அறிஞர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/63&oldid=489814" இலிருந்து மீள்விக்கப்பட்டது