பக்கம்:திருப்புமுனை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


தருகிறது. இந்த உண்மைகளை மனதிற் கொண்டு பார்க்கும்போது போட்டியில் முதற் பரிசு பெறும் மாணவன் எல்லா வகையிலும் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக அமைந்துள்ளான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கும் அந்த மாணவன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவன்தான் இனியன்!

“இனியன் எழுதிய கட்டுரையைத் திருடி, பெயரை மட்டும் மாற்றி தன் பெயரைப் போட்டு கட்டுரைப் போட்டிக்கு அனுப்பிய கண்ணாயிரத்துக்கு, அவன் செய்த திருட்டுக் குற்றத்துக்காக ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.”

ஆசிரியர் கூறியதைக் கேட்டபோது கண்ணாயிரத்தின் நண்பர்கள் எல்லோரும் அவன் வெறுப்புக் கொண்டனர். “கண்ணாயிரத்தோடு சேர்ந்ததுக்கு நாமெல்லாம் வெட்கப்படனும்’டா” வேதனையோடு கூறினான் மணி.

“இனி, அவன் திருட்டு முகத்திலேயே விழிக்கக் கூடாதுடா” உறுதிபடக் கூறினான் தங்கதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/65&oldid=489816" இலிருந்து மீள்விக்கப்பட்டது