பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 101


முற்பட்டால், பிறகு அதிகாரச் சட்டத்தை நாட வேண்டியதுதானே! ‘தமிழரசி’ பத்திரிகையின் அதிபரிடமிருந்து தனிப்பார்வைக் கடிதம் ஒன்று வந்தது. நேரில் தெரிவித்த கலியான சமாசாரத்தை நினைவுகூட்டி முடிவைத் தெரிவிக்கும்படி குறித்திருந்தார். நேற்றுத்தான் பதில் எழுதியிருக்கிறேன்!

அடுத்த உறை, திரைப்படக் கம்பெனியின் முத்திரையைப் பெற்றிருந்தது. அது, ஞானசீலன் எழுதிய ‘தமிழச்சி’ என்ற நாவலைப் படமாக்க அனுமதி கோரியும் விரைவில் புறப்பட்டு வந்து, சம்மானத் தொகையை நிர்ணயம் செய்து முன் பணம் பெறும்படியும் சொன்னது. திரை உலகின் தலைவாசலை மிதிப்பதற்குள், இந்த மூன்று நான்கு ஆண்டுகளிலே தாம் அனுபவித்த தோல்விகளையும் ஏமாற்றங்களையும் அவர் புள்ளி போட்டுப் பார்த்தார். கடுகத்தனைகூட இலக்கிய ஞானமே இல்லாத தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் இரண்டொருவர் பண்ணிய போலி ஆடம்பரங்கள், நடிகர்களுக்குப் பதிலாக அவர்கள் பரமரசிகர்களாக நடித்த நடிப்பு; அவர்களுக்குத் தாளம் போட்ட கூஜாப் பேர்வழிகள், எல்லோருக்குமே ட்ரேட் மார்க்கான ஸில்க் சட்டைகள்; மூலக் கதையைக் கேட்க ‘பில்லியர்ட்ஸ் சிகரெட்’ டுடன் காத்திருந்த பைஜாமா டைரக்டர், பைஜாமாவை நம்பியிருந்த அப்பாவித் திரைக்கதை வசனகர்த்தா, அந்த வசன கர்த்தாவுக்கு வல்லினம் மெல்லினம் தெரியாவிட்டாலும், எக்ஸ்டிராக்களின் ஜாபிதாவை மனப்பாடம் செய்யத் தெரிந்திருந்த அந்தப் பிழைப்பு-இத்யாதி நிகழ்வுகள் திரைச் சுருள்களாக விரிந்தன.

“திரை உலகம் என்பது மாயாலோகம் ஸார். எதுவும் கண்ணுக்கும் மெய்யாக நடந்தால்தான் நிச்சயம்” என்று