பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அதற்கெனவே காத்திருந்த களி, ஆவல், விண்ணடைந்த விளைவு போன்ற மனோலயப் பின்னணியை உடன் அமர்த்திக் கொண்டு இருந்த சமயத்தில், குந்தவ்வை என்ற மாற்றுப் பெயர் விளையாட்டுக் காட்டி, அப்புறம் சற்றைப் போதிற்கெல்லாம் 'சுய உரு'வைக் காட்ட முனைந்திட்ட திட்டத்தை ஏந்தி நின்ற அந்தப் பெண் தவசீலியை மறுபடி பார்ப்பதற்கு அவருக்கு நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் கூடுதலாகத் தேவைப்பட்டன. விதியைச் சந்தித்தாற் போலவே அவருள் ஒரு மன உணர்வும் மனப்பான்மையும் தோன்றலாயின.!

வெளிச்சுற்று வட்டத்தில் இதுவரை தவித்துக் கொண்டிருந்த ஞானசீலன், இப்பொழுது இதயத்தின் உட்புற வட்டத்தில் சுற்றினார். மனிதாபிமானம் மிகுந்த ஞானசீலன் சுற்றினாரா? இல்லை. மனிதாபிமானத்தை நிறுவை இட்டுக் கணிக்கக் கூடிய எழுத்தாளர் ஞானசீலன் சுற்றினாரா? என்னவோ, தவசீலியும் அவள் உரைத்த சொற்களும் சுற்றிச் சுழன்று கொண்டேயிருந்தன.

தாழ்த்திவிட்டிருந்த கண்களை உயர்த்திவிடக் கருதி, மெல்ல-மெல்லத் தலையை நிமிர்த்தினார்; பூப்போட்ட சோளிக் கைகளின் நடுக்கத்தைக் கண்டார்; ஆனால் பூக்கரங்களின் நளினத்தைக்காணவில்லை. இன்னும் சற்று உயர்த்தினார். அணை உடைந்த வெள்ளத்தைக் கண்டார்; ஆனால் பேசும் விழிகளின் நயத்தைக் காணவில்லை. எடுப்பான நாசி, அதற்கு அழகூட்டிய மூக்குத்தி, சிமிக்கி. பிறை நெற்றியின் பிறைப்பொட்டு, கலைந்த சுரிகுழல், கலையாத மாரமைப்புச் சேலையின் ஈரம், ஏதோ ஒரு பயங்கரச் செய்தியைக் கொட்டிவிட்டு ஒடக் காத்திருக்கும் லாகவத் துடிப்பு போன்ற வெவ்வேறு வகைக்