பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 113



கோட்டுருவங்களால் ஒன்று சேர்க்கப் பட்டு நின்ற ஓர் உயிர்ச் சித்திரமாக நின்று கொண்டிருந்தாள் தவசீலி.

"ஆசிரியர் ஸார்"

"..........."

"ஸார்...!"

"............"

"ஆசிரியர் ஸார்!" என்று கூப்பிட்டதுடன் நிற்கவில்லை அவள். வலப்புறக்கையை ஒடித்து மடக்கி நீட்டினாள். அது அவரைத் தொட்டது. உள்ளத்தையா? ஊஹும், அவரது முதுகை!.

"தவசீலி, ஏன் நின்று கொண்டே யிருக்கிறீர்கள்? உட்காருங்கள்!"

அவள் அமர்ந்தாள், பாயில் எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்திருந்தனர். ஞானசீலனுக்கு என்னவோ போலிருந்தது. அவளது தாமரை முகத்தைப் பார்க்க ஓடிய பார்வை, அவளுடைய கஞ்சமலர்ப் பாதங்களை மொய்த்தது. மருதாணிச் சிவப்பில் தோய்ந்திருந்த கால்விரல் நகங்களும், பச்சை நரம்போடிய குதிகாலின் பரப்பும், கணுக்கால்களை மறைத்து மூடியிருந்த 'வாயில்' புடவையும் கரையை நெருடிக் கொண்டிருந்த செக்கச் சிவந்த விரல்களும் அவருக்கு இலக்குப் புள்ளிகள் ஆயின. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள் முதலானவர்களுக்கு அப்புறம்தான் மற்ற ரசிகர்கள். கலைக்கண் கொண்டு இந்தப் பிரிவினர் ரசிப்பதே தனிப் பாங்குதான்.

அவரால் தவசீலியின் எழிலை ரசிக்க முடிந்தது.

தி.சொ.நி.-8