பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


ஆனால் அவருக்கு அவள் அழுகையை ரசிக்க முடிவில்லையே!

"ஸார்!"

"என்ன, சொல்லுங்கள்!

“சற்று முன் சொன்னது நினைவில் இருக்கிற தல்லவா?"

"ஊம்!"

"நீங்கள் வேறு ஏதோ கவனமாக இருப்பதாகத் தோன்றுகிறதே?"

"எழுத்தாளன் மனம் எப்போதாவது ஓய்வு எடுத்துக் கொள்ள முடியுமா? இல்லை, அப்படி விரும்பினாலும் லீவுதான் கிடைக்குமா? உங்களுக்குத் தெரியாதா? அலை கடலும் கதாசிரியன் மனமும் ஒரே நிறைதானே?"

"நல்ல உதாரணம் ஸார் ! உங்கள் கதைகளில் காண்டேகர் மாதிரி புதுப்புது உவமைகள் பேசும்முறை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!"

"என்னைப் பற்றி என்னிடம் பேசுங்கள்; என் எழுத்துக்களைப் பற்றி உங்கள் தோழிமார் வட்டத்தில் பேசுங்கள்."

"உங்கள் கண்டிப்புக் குணத்தை நான் முதன் முதலில் உங்கள் ஆபீசுக்கு வந்தபோதே புரிந்து கொண்டேன், ஸார்!"

"சந்தோஷம்; ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒழுகும் முதிர்ச்சியும் பக்குவமும் விளைந்து விட்டால் மனித சமுதாயத்தில் போட்டி, பொறாமை, குதுவாது போன்ற தீ நலப் பண்புகள் இற்றுவிடுமே தவசீலி? சரி;