பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 11



வைத்துத் தீட்டிய தலையங்கத்தைப் புகழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குக் கிடைத்துள்ள பதினைந்து இடங்களை வாழ்த்தித் துணைத் தலையங்கம் எழுத வேண்டுமென்ற தம் உளநிலையைச் சொன்னார். துணையாசிரியர், 'செய்யுங்கள்',என்றார்.

முதலாளியின் கார் பறந்தது.

பறக்க முயன்ற அச்சுப் படிவங்களைத் தம்முடைய கைப்பைக்குள் திணித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் ஞானசீலன்.

நடன ராணியின் கார் குறுக்கிட்டது. குறுக்கிட்ட பதில் சிரிப்பு விழி விலக்கியது!

பிராட்வேயின் குறுகிய பாதையில் பரந்து நெளிகின்ற சுறுசுறுப்புக்குக் கேட்க வேண்டுமா?

2. பாசத்தின் அலைக்குமிழ்

லர்ந்த மல்லிகைப் பூக்களை மேனியில் ஒட்டிக் கொண்டாற்போன்று காட்சியளித்த நாய்க்குட்டி ஒன்றை மார்புடன் அணைத்த வண்ணம், வண்ணப் பசுமையைப் போட்டிக்கு இழுக்கும் செருக்குடன் காட்சியளித்த திரை அழகி பத்மினியின் ஓவியம், ஒளி வெள்ளச்சுவரை ஒளி உமிழ் அலங்காரம் செய்து கொண்டிருந்தது!

ஞானசீலனின் வாசஸ்தலம் அது. கோடை ஆகட்டும், குளிர் ஆகட்டும், எல்லாப் பருவங்களும் அந்த அறையில் நுழையாமல் தப்ப முடியாது.

தேசப்பற்றுக் கொண்ட அரசியல் தலைவர்கள் எனில் அவருக்கு ஒரு பற்றுதல். ஆகவே, அவரவர்களின்