பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



பாணியில் அவரவர்கள் நகைமுகம் துலங்கத் தோன்றினார்கள்!

ஒரு பக்கம் சாய்மானக் குறிச்சி.

மறுபுறம் தண்ணீர்ப் பானை.

கீழ்ப்பகுதியில் பெரிய புத்தக அலமாரி.

சுற்றிச் சுற்றிப் பார்த்தார் அவர். காலேஜ் படிப்பின் போது எடுத்த நிழற்படம் ஒன்று காணப்பட்டது. 'டை' கட்டியிருந்த அவரது உருவத்தைப் பார்த்ததும் அவருக்குக் குறுஞ்சிரிப்பு குறுக்கோடியது. மனிதர்கள் மாறுகிறார்கள். ஆனால் நிழல்கள் மாற முடியாது! உருவம் மாறுகிறது; ஆனால் உள்ளமும் ஏனோ எப்படியோ, மாறித்தான் தீர்வு பெற வாய்க்காத நியதிகளுள் இதுவும் ஒன்றோ?

அறைத் தோழர் நித்தியானந்தம் வந்தார். பழகுவதற்கு ஏற்ற உயர்ந்த மனிதர். அடுத்த அறை நண்பர்கள் தாஸ், சுந்தர்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் வந்தார்கள். நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி வழக்கம் போலக் காரசாரமான பேச்சு வார்த்தைகள் நடைபெறலாயின. பிறகு, அமைதி வந்தது.

புகை பிடித்துக்கொண்டே ஞானசீலன் மேஜையைப் பார்த்தபோது, அவரது பார்வைக்குத் தவம் இருந்த தொடர்கதையின் அச்சுப் படிவங்கள் தென்பட்டன. திருத்திக் கொண்டே வந்தார்.

ஓரிடம்.

"...தியாகம் என்ற குணநலன் சொல்லிக் கொண்டு வருவது இல்லை; சொல்லியும் தெரிவது கிடையாது. உள்ளத்தில் உதிரத்துடன் ஊறிப் பக்குவப்படும் இப்பண்புதான் மனிதனை மனிதனாக உயர்த்திக் காட்டவல்லது. பிறவா வரம் வேண்டுமென்றார்கள் பண்டைப்