பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 131



"நான் தடுக்காமல் இருந்தாக்க இந்நேரம் வாணி விஷத்தைக் குடிச்சிருக்கும், தம்பி!" என்று கலங்கிய தொனியில் சொன்னாள் ஞானசீலனின் தாய்.

அப்பொழுதுதான் வாணி தலைநிமிர்ந்தாள்.

"வாணி! என்னை மன்னித்துவிடு. ஆண்டவனைப் பற்றி இதுவரை எவ்வளவோ சந்தர்ப்பங்களில் எழுதி யிருக்கிறேன் நான். ஆனால் இன்றுதான் அவனைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டேன். அலகிலா விளையாட்டுடையவன் ஆண்டவன் என்பதைக் கண் முன்னே நிதர்சனமாகப் புரிந்துகொண்டேன் நான்! இனி, என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்? சொல், வாணி, சொல்!" என்று நைந்த குரலை மறைத்தவராகக் கெஞ்சினார் அவர்.

"என் உயிர்த் தோழி தவசீலிக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுங்கள்!" என்று வாணி கெஞ்சிய குரலில் கோரினாள்.

"உன் தியாகத்தை வாழ்த்தி நிறைவேற்றவும், உன் சிநேகிதியின் காதலை வாழ்த்தி அங்கீகரிக்கவும் நான் கடைசி வரை முயலுவேன். இது உறுதி. ஆனால், எனக்குச் சில நாழிகைப் பொழுதிற்கு ஓய்வு கொடு. நாளை இரவுக்குள் உனக்குச் செய்தி அனுப்பி விடுகிறேன், வாணி!"

சிறு குழந்தையாகி, நெஞ்சடைக்க வார்த்தைகளைக் கக்கினார் கதாசிரியர்.

தவசீலியின் கைகளைப் பற்றியவாறு வழி நடந்தாள் வாணி! "தவசீலி, உனக்குத் தத்தம் செய்து கொடுத்த இவ்வுயிரை என்னுடைய அவசரத் துணிவினால்