பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



ஆத்திரப்பட்டுப் போக்கிக் கொள்ள முயற்சி செய்த என் அறியாமையை மன்னித்துவிடு. தவசீலி, மன்னித்துவிடு! உன்னிடம் வாக்குக் கொடுத்தபடி, என்னை மாலையும் கழுத்துமாக நீ பார்த்து ரசிப்பதற்கு என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ளவும் செய்கிறேன், தவசிலி!" என்று சொல்லிக் கொண்டே வழி நடந்தாள் வாணி!.

20. சமுதாயத்தின் காவலன்!

ண்முகத் தெய்வமணி, வள்ளி-தெய்வானை சமேத்ராகக் காட்சியளித்த அந்தக் காலண்டரையே இமை பாவாமல் விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தார் ஞானசீலன், உள்ளம் பிதுங்கத் துயர வெள்ளம் அலை பாய்ந்தது; கண் பிதுங்கச் சுடுநீர் வடிந்தது. "அப்பனே! முருகா! ஆறுமுகக் கடவுளே! என்ன சோதனை செய்து விட்டாய் அப்பனே!" என்று இதழ் விலக்கி, சொற்சரம் தொடுத்தார். கையில் வைத்திருந்த பேனாவை மேஜைப் பரப்பில் வீசிவிட்டு, கைகள் இரண்டையும் பிசைந்தார்; கிராப்புத் தலையை வினாடிக்கு வினாடி பிய்த்துக் கொண்டார். பூட்டிய கதவுகளைப் பார்த்த சடுதியில் கடைபரப்பிக் கிடந்த பேப்பர் புத்தகக் குவியல்களை நோட்டமிட்டார். நெஞ்சு கனத்தது. குந்தியிருந்த நாற்காலி முன்பத்தை ஆனது. மலர்க் காடாகி யிருந்த மனம் சுடுகாடாகி விட்ட மாதிரி ஓர் அரிப்பு ஊறியது.

'கைக்கு மெய்யாக வந்து உள்ளங்கைக்கு அடக்கமாகியிருந்த கொம்புத்தேன் விரல் வழி வழிந்துவிட்ட கதையாக ஆகிவிட்டதே என் கதை! வாணி, உன்னை நான் எவ்விதம்