பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



"வாணி! நீ என் தொழுகைக்குகந்த தெய்வம், தாயே!" என்று புகழுரை நல்கி, மறுமுறையும் நெஞ்சுடன் நெஞ்சு சேர்த்துத் தழுவிக் கொண்டாள் தவசீலி, அப்போது "வாணி! வாணி!" என்று பெருங்குரலில் புலம்பியவராக ஓடி வந்த ஞானசீலன், தாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றவராகி, அந்தச் சிசாவை வாணியிடமிருந்து பிடுங்கி வீசினார்.

தவசீலி திரும்பினாள். 'விஷம்' என்ற மூன்று எழுத்துக்கள் மட்டிலும் உடையவில்லை ! "உன் தந்திரத்தை உணர்ந்துதானே தான் இங்கு ஓடிவந்து சர்வ ஜாக்கிரதையாக உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னை ஏமாற்றி விடப் பார்த்தாயே வாணி? ஏன்? நீ இவ்வுலகை விட்டுப் போய்விட்டால், அப்புறம் நான் மட்டிலும் இங்கு தங்கியிருப்பேன் என்றுதானே மனப்பால் குடித்திருக்கிறாய். ஐயா! இந்தாருங்கள், உங்களுக்கு ஒரு கடிதம்," என்று சொல்லி உறை ஒன்றைச் சமர்ப்பித்தாள் தவசீலி.

நடுங்கிய ஞானசீலனின் விரல்களில் முடங்கல் முடங்கியது.

"ஐயா,

தவசீலி என் அன்பில் விளைந்த உதாரணப் பெண்- உடன்பிறவாச் சகோதரி. அவளை அழச் செய்து விடாதீர்கள். கனவுகளை வளர்த்துக் கொண்ட காதலர்கள் ஒரு பிறவியில் தங்கள் லட்சியங்களில் வெற்றி பெறா விட்டாலும், மறுபிறப்பில் நிச்சயம் வெற்றி பெற்றே தீருவார்கள் என்றும், இந்த ஐதீகத்தின் அடிப்படையிலேயே விட்டகுறை தொட்டகுறை தத்துவமே உருவாகி